மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு- மன்னார் முசலியில் சம்பவம்.
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட மறிச்சுக்கட்டி, கத்தாங்கண்டல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை 07.05.2015 மாலை வயலில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக சிலாபத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான கரடிக்குழி கிராமத்தில் வசித்துவந்த 38 வயதுடைய நபரே மேற்படி உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு இது தொடர்பான மேலதிக விசாரணையை சிலாவத்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஏப்பிரல் மாதம் 19ம் திகதி இரவு இதே கிராமத்தின் வியாடிக்குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு- மன்னார் முசலியில் சம்பவம்.
Reviewed by NEWMANNAR
on
May 08, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 08, 2015
Rating:


No comments:
Post a Comment