கிளிநொச்சியில் காணாமல்போன சிறுமி வவுனியா பஸ்நிலையத்தில் மீட்கப்பட்டார்!
கிளிநொச்சி நகரில் கடந்த வியாழக்கிழமை காணாமற்போன மாணவி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா பஸ் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை வவுனியா பஸ் நிலையத்தில் காத்திருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு நீதிவானின் உத்தரவுக்கமைய சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி நகரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் பணிபுரியும் தனது தாயாரை சந்திக்கச் சென்ற மாணவியை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை என்று பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 ல் கல்வி கற்கும் மணியம் விதுஷா (வயது -16) என்ற மாணவியே காணாமல் போயிருந்தார்.
இந்த நிலையில் இன்று வவுனியா பஸ் நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த சிறுமி ஒருவர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது உண்மை தெரியவந்தது.
சிறுமியை அழைத்துச் சென்ற பொலிஸார் நீதிவான் முன்நிலையில் முற்படுத்தினர்.
இதன்போது சிறுமியை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்புடைய செய்தி - கிளிநொச்சியில் 16 வயது சிறுமி காணாமல்போயுள்ளார்
கிளிநொச்சியில் காணாமல்போன சிறுமி வவுனியா பஸ்நிலையத்தில் மீட்கப்பட்டார்!
Reviewed by Author
on
May 31, 2015
Rating:
Reviewed by Author
on
May 31, 2015
Rating:

No comments:
Post a Comment