அண்மைய செய்திகள்

recent
-

பதக்கங்களை வென்றுதந்த வீர வீராங்கனைகள் கெளரவிப்பு இலட்சங்களில் பணப்பரிசும் வழங்கியது அமைச்சு


கத்­தாரில் நடை­பெற்ற ஆசிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் இலங்கை அணிக்கு பதக்­கங்­களைப் பெற்­றுத்­தந்த வீர வீராங்­க­னை­க­ளுக்­கான கௌர­விப்பும் பணப்­ப­ரிசு வழங் கும் நிகழ்வும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சில் நேற்று நடை­பெற்­றன. இதன்­போது கத்தார் ஆசிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் 400 மீற்றர் சட்­ட­வேலி ஓட்­டப்­போட்­டியில் தங்கப் பதக்கம் வென்ற யமா­னிக்கு விளை­யாட்­டுத்­துறை அமைச்­சினால் ரூ.3 இலட்சம் பணப்­ப­ரிசும் பொறி­யி­ய­லாளர் கூட்­டுத்­தா­ப­னத்­தினால் ரூ.2 இலட்சமும் அத்­தோடு யமா­னியின் பயிற்­சி­யா­ள­ரான பண்­டா­ர­வுக்கு 75000 ரூபா பணப்­ப­ரிசும் விளை­யாட்­டுத்­துறை மற்றும் சுற்­று­லாத்­துறை அமைச்­ச­ரினால் வழங்­கப்­பட்­டது. இந்­நி­கழ்­வின்­போது பேசிய விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க, இலங்­கையில் விளை­யாட்டு வீரர்­களை ஊக்­கு­விப்­ப­தற்கும் அவர்கள் சாதனை படைப்­ப­தற்கும் தன்­னா­லான அனைத்து செயற்­பா­டு­க­ளையும் எவ்­வித தயக்­க­மு­மின்றி முன்­னெ­டுப்­ப­தாகத் தெரி­வித்தார். நாட்டில் பல சிறந்த வீர வீராங்­க­னைகள் இருக்­கி­றார்கள். இவர்­களை இனங்­கா­ணு­வ­துதான் எமது முக்­கிய திட்­ட­மாக இருக்­கின்­றது. அவ்­வாறு இனங்­கா­ணப்­பட்ட பின் அவர்­க­ளுக்கு தேவை­யான அனைத்­தையும் நாம் செய்­து­கொ­டுக்க கட­மை­ப்பட்­டி­ருக்­கிறோம். கத்­தாரில் நடை­பெற்ற கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டியில் இலங்­கைக்கு தங்­கப்­ப­தக்கம் கிடைத்தது என்ற செய்­தியை கேட்­ட­வுடன் நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டைந்தேன். அதே­நேரம் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ராக பெரு­மையும் கொள்­கிறேன். இது ஆரம்பம் மட்­டுமேஇ இன்னும் இன்னும் நாம் சாதிக்க நிறைய இருக்­கின்­றது. அதை­நோக்­கித்தான் தற்­போ­தைய எமது பய­ணத்­திட்டம் அமைந்­துள்­ளது. எதற்கும் அச்சம் கொள்­ள­வேண்டாம் என்று வீர வீராங்­க­னை­களை அறி­வு­றுத்­திய அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க எந்­த­வி­த­மான சவால்கள் வந்­தாலும் அதை எதிர்த்து போராடும் தன்­மையை நாம் வளர்த்­துக்­கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரி­வித்தார். முதலாவது ஆசிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் வெள்ளிப் பதக்­கங்­களை வென்­றெ­டுத்த மூன்று வீரர்­க­ளுக்கும் பணப்­ப­ரிசு அமைச்­சர்­க­ளினால் வழங்­கப்­பட்­டது. ஆண்­க­ளுக்­கான உயரம் பாய்­தலில் வெள்ளிப்­ப­தக்­கத்தை வென்­றெ­டுத்த ரொஷான் தம்­மிக்க ரண­துங்க கொடக்கா, ஆண்­க­ளுக்­கான முப்­பாய்ச்­சலில் வெள்­ளிப்­ப­தக்கம் வென்­றெ­டுத்த சமல் குமா­ர­சி­றிக்கும் 400 மீற்றர் சட்­ட­வேலி ஓட்டப் போட்­டியை 52.88 செக்­கன்­களில் நிறைவு செய்து வெள்ளிப்­ப­தக்கம் வென்­றெ­டுத்த எம். எஸ். ராஜ­ப­க் ஷ­வுக்கும் தலா ரூ.2 இலட்­சம் வீதம் வழங்­கப்­பட்­டது. அத்­தோடு இவர்­களின் பயிற்­சி­யா­ளர்­க­ளுக்கு ரூ. 50 ஆயிரம் வீதம் பணப்­ப­ரி­சு வழங்­கப்­பட்­டது. 42 நாடுகளைச் செர்ந்த 750 இற்கும் மேற்பட்ட மெய்வல்லுநர்கள் கலந்துகொண்ட இப் போட்டியில் 15 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அத்துடன் 27 நாடுகளைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ஒரு பதக்கத்தையாவது வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதக்கங்களை வென்றுதந்த வீர வீராங்கனைகள் கெளரவிப்பு இலட்சங்களில் பணப்பரிசும் வழங்கியது அமைச்சு Reviewed by Author on May 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.