கண்டியில் கடும் மழை 166 பேர் பாதிப்பு
மலையகத்தைப் பாதித்துள்ள சீரற்ற காலநிலையை அடுத்து பெய்துவரும் கடும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தில் பாத்ததும்பறை மற்றும் கங்கவட்ட கோரள பிரதேச செயலக பிரிவுகளில் 32 குடும்பங்களை சேர்ந்த 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையின் படி, ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பாத்ததும்பறை பிரதேச செயலக பிரிவில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஆறு பேரும், கங்கவட்ட கோரளை பிரதேச செயலக பிரிவில் 30 குடும்பங்களை சேர்ந்த 160 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டியில் கடும் மழை 166 பேர் பாதிப்பு
Reviewed by Author
on
May 12, 2015
Rating:

No comments:
Post a Comment