
வெடி மருந்து கடத்தியதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆன்ட்ரூ ஃபிளெட்ச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ஆன்ட்ரூ பிளெட்ச்சர், தற்போது டொமினிக்கா தீவில் உள்ள வின்ட்வேர்ட் ஐலேண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் டொமினிக்காவில் இருந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு செல்ல அவர், அங்குள்ள டக்ளஸ் விமானநிலையத்துக்கு சென்றார். அப்போது அவரை சோதனையிட்ட அதிகாரிகள் ஃபிளெட்சரின் பைகளில் வெடிமருந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஃபிளெட்சரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஃபிளெட்சரிடம் இருந்து 50 கிலோ எடையுள்ள வெடிமருந்து கைப்பற்றப்பட்டன.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக ஆன்ட்ரூ ஃபிளெட்ச்சர் 15 ஒருநாள் போட்டிகள் மற்றும் 22 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment