பூகம்பத்தின்போது பாதிக்காத நிலையில் தாஜ்மகால் சுவர் திடீரென இடிந்ததால் பரபரப்பு
ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் ஷாஜகான் தன் காதல் மனைவி மும்தாஜுக்காக சலவைக்கல்லில் 17–ம் நூற்றாண்டில் எழுப்பிய தாஜ்மகால், காலமெல்லாம் காதல் சின்னமாக திகழ்ந்து வருகிறது. உலக மக்களையெல்லாம் அது கவர்ந்து வருகிறது.
இந்த நிலையில், நேபாளத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால், வட மாநிலங்கள் பாதிப்புக்குள்ளான போதும், தாஜ்மகாலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரு சிறு கீறல் கூட விழ வில்லை என்பது ஆறுதலாக அமைந்தது.
ஆனால் நேற்று காலை 6 மணிக்கு தாஜ்மகாலில் ஒரு சுவர் பகுதி திடீரென இடிந்து விழுந்தது, பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
இதைக் கண்டு தாஜ்மகால் நிர்வாக அதிகாரி தனுஜ்சர்மா, பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்போது அங்கு பார்வையாளர்கள் யாரும் இல்லாததால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பாக தனுஜ்சர்மா கூறும்போது, ‘‘கடந்த காலத்தில் நிறைய குரங்குகள் வந்து அட்டூழியம் செய்தன. அதன் விளைவாகக்கூட இந்த சுவர் இடிந்து விழுந்திருக்கலாம்’’ என்றார்.
கடந்த 2011–ம் ஆண்டு தாஜ்மகாலில் ரூ.25 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் நடந்தன. அப்படி இருந்தும், இந்த சுவர் இடிந்து விழுந்திருப்பது, அதன் பராமரிப்பில் கேள்விக்குறியை எழுப்பி உள்ளது.
இப்போது சுவர் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து அது குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பூகம்பத்தின்போது பாதிக்காத நிலையில் தாஜ்மகால் சுவர் திடீரென இடிந்ததால் பரபரப்பு
Reviewed by NEWMANNAR
on
May 08, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 08, 2015
Rating:


No comments:
Post a Comment