மகளிர் கிரிக்கெட்டில் பாலியல் இலஞ்சம்:அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யவென அமைக்கப்பட்ட குழு அதன் விசாரணை அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் மகளிர் அணி பணிப்பாளர் மற்றும் தேசிய தேர்வாளர்கள் பாலியல் இலஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் நிமல் திஸாநாயக்க தலைமையிலான குழு நேற்று அமைச்சரிடம் அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் மகளிர் அணியில் இடம்பிடிக்க வேண்டுமாயின் தேர்வாளர்கள் சிலருக்கு பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதென முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பில் ஆராய 2014ஆம் ஆண்டு அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே விசாரணை குழுவொன்றை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
மகளிர் கிரிக்கெட்டில் பாலியல் இலஞ்சம்:அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிப்பு
Reviewed by Author
on
May 21, 2015
Rating:
Reviewed by Author
on
May 21, 2015
Rating:

No comments:
Post a Comment