
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை தனக்குத் தானே மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்ட க.நளாயினி (வயது 40) என்பவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை பிற்பகல் தீ வைத்துக் கொண்ட இவரை உறவினர்கள் உடனடியான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரின் மரண விசாரணை மேற்படி போதனா வைத்தியசாலையில் காத்தான்குடி வடக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ச.கணேசதாஸினால் நடத்தப்பட்டது. பிரேத பரிசோதனை செய்த சட்ட வைத்தியர் யாப்பா பண்டார தீ காரணமாக 90 வீதம் உடல் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தார். தற்கொலை மரணம் என்று மரண விசாரணை அதிகாரி அறிக்கை வழங்கினார்.
No comments:
Post a Comment