பரவிவரும் கண் நோய் : உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்க!
பரவிவரும் கண் நோய் : உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்க!
நாடளாவிய ரீதியில் ஒருவித கண் நோய் பரவியுள்ளதாக சுகாதார தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
கண்நோய்க்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வைத்தியசாலையை நாடும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய கண் நோய் வைத்தியசாலையின் நிபுணர் டொக்டர் கபில பந்துதிலக்க குறிப்பிட்டார்.
கண்கள் சிவத்தல், கண்களில் அரிப்பு, கண்களில் கண்ணீர் மற்றும் கபம் வடிதல் ஆகியன இந்த நோயின் அறிகுறிகளாகும்.
சில சந்தர்ப்பங்களில் கண் இமைக்கு அருகில் வீக்கம் ஏற்படுதல் அல்லது கண்ணீருடன் இரத்தக்கசிவு போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம் என டொக்டர் கபில பந்துதிலக்க சுட்டிக்காட்டினார்.
கண் நோய் தொற்றுக்கு இலக்காகியிருந்தால் உடனடியாக தகுதியான வைத்தியர் ஒருவரை நாடி உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
பரவிவரும் கண் நோய் : உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்க!
Reviewed by NEWMANNAR
on
May 30, 2015
Rating:

No comments:
Post a Comment