அண்மைய செய்திகள்

recent
-

யுத்தம் காரணமாக வவுனியாவில் இடம்பெயர்ந்த 970 பேரை மீள் குடியேற்ற நடவடிக்கை


யுத்தம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 970 பேரை மீள் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 25 வருடங்களுக்கு முன்பதாக சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த 284 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் இதுவரை பூந்தோட்டம் மற்றும் சிரம்பரபுரம் நலன்புரி நிலையங்களில் வசித்துவந்தனர்.

சொந்த கிராமங்களில் மீண்டும் குடியேறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இவர்களை சின்ன அடம்பன் மற்றும் சிதம்பரபுரம் அகிய பகுதிகளில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

யுத்தம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்த சுமார் 40 ஆயிரம் பேர் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 970 பேரும் இன்னும் மூன்று மாதங்களுக்குள் மீள் குடியேற்றப்படுவார்கள் என வவுனியா மாவட்ட செயகலம் குறிப்பிட்டுள்ளது
யுத்தம் காரணமாக வவுனியாவில் இடம்பெயர்ந்த 970 பேரை மீள் குடியேற்ற நடவடிக்கை Reviewed by NEWMANNAR on May 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.