அண்மைய செய்திகள்

recent
-

மடு மாந்தைமேற்கு உதைபந்தாட்ட கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான உதைபந்தாட்டப் போட்டி- Photos


மடு மாந்தைமேற்கு உதைபந்தாட்ட கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான உதைபந்தாட்டப் போட்டி

கத்தாளம்பிட்டி புனித இராயப்பர் விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 9/10 ம் திகதிகளில் இப்போட்டி நடைபெற்றது.

10ம் திகதியன்று இரண்டு அரை இறுதிஆட்டங்களும், இறுதி ஆட்டமும் நடைபெற்றன.

முதலாவது அரையிறுதியாட்டத்தில் விடத்தல்தீவு புதிய ஐக்கிய விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ஆண்டாங்குளம் புனித தோமையார் விளையாட்டுக்கழகம் ஆடியது.

இதில் புதிய ஐக்கிய விளையாட்டுக்கழகம்...00,
புனித தோமையார் விளையாட்டுக்கழகம்.02 என்ற கோலடிப்படையில் புனித தோமையார் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.

இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் விடத்தல்தீவு இணைந்த கரங்கள் அணியினரைஎதிர்த்து சின்னப்பண்டிவிரிச்சான் புனித சவேரியார் விளையாட்டுக்கழகம் ஆடியது.

இதில்புனித சவேரியார்.01
இணைந்த கரங்கள்.00 என்ற கோலடிப்படையில் புனித சவேரியார் அணி வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் தண்ட உதை மூலம்
சின்னப்பண்டிவிரிச்சான் புனித சவேரியார். 4
ஆண்டாங்குளம் புனித தோமையார்.3 என்ற அடிப்படையில் பனித சவேரியார் அணி வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

இவ்விறுதிப்போட்டிக்கு மாந்தை மேற்கு பிரதேசதலைவர் சு.வரப்பிரகாசம். அருட்சகோதரர். விஐயதாசன், கிராம சேவகர். விஜி, மற்றும் மடு மாந்தைமேற்கு உதைபந்தாட்ட லீக் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.





மடு மாந்தைமேற்கு உதைபந்தாட்ட கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான உதைபந்தாட்டப் போட்டி- Photos Reviewed by NEWMANNAR on May 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.