வித்தியாவின் மரணம் தொடர்பில் பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-செல்வம் எம்.பி.
புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா படுகொலையின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்னிறுத்தி,இனி வருங்காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறாத வகையில் மக்களை பாதுகாக்க பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியாவின் மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள செய்தியிலே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,,,,
யாழ்ப்பாணம் புங்குடுதீவு 4ம் வட்டாரத்தில் உயர் தரத்தில் கல்வி கற்கும் வித்தியா என்ற 18 வயதுடைய மாணவி கடத்தப்பட்டு துஸ்பிரையோகத்திற்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த யுத்த காலத்தில் எமது மக்களும் குறிப்பாக பெண்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள் இன்றும் பின் தொடர்ந்து செல்கின்றது.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வண்முறைகள் அதிகரித்த நிலையில் உள்ளது.
பாதுகாப்பு தப்பினர் வடக்கில் நிறைந்துள்ள சூழலில் குறித்த மாணவி கடத்தப்பட்டு துஸ்பிரையோகத்திற்குற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் பல்வேறு குற்றங்களுக்கு பொலிஸார் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகள் மந்த கதியில் உள்ளமையினாலேயே குறித்த சம்பவங்கள் வடக்கில் அதிகரிப்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே பாடசாலை மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதோடு,வடக்கில் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஸ்பிரையோகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கைது செய்யப்பட்ட குற்றவாழிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.மாணவி வித்தியாவிற்கு நடந்த இந்த துயரச்சம்பவம் இனி யாருக்கும் நடக்கக்கூடாது.எனவே பொலிஸார் இவ்விடையத்தில் துரிதமாக செயற்பட வேண்டும்.
வித்தியாவை பிறிந்து துடிக்கும் பெற்றோர்,சகோதரர்கள்,உறவினர்கள்,சக மாணவர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
வித்தியாவின் மரணம் தொடர்பில் பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-செல்வம் எம்.பி.
Reviewed by NEWMANNAR
on
May 16, 2015
Rating:

No comments:
Post a Comment