மடுக்கரை ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் அமைக்கப்படவுள்ள அன்னதான மடத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு.-Photos
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடுக்கரை கிராமத்தில் அமைந்துள்ள மடுக்கரை சிறி விநாயகர் ஆலயத்திற்கான அன்னதான மடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(25) திங்கட்கிழமை மதியம் இடம் பெற்றது.
மடுக்கரை கிராம மக்கள்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோரின் நிதி உதவியுடன் அமைக்கப்படவுள்ள குறித்த மடத்தின் அடிக்கல்லினை இன்று திங்கட்கிழமை (25) வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன்,தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) முக்கியஸ்தர் ஜஸ்ரின்; மற்றும் ஆலய முக்கியஸ்தர்கள் இணைந்து அடிக்கல்லினை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மடுக்கரை ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் அமைக்கப்படவுள்ள அன்னதான மடத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 25, 2015
Rating:
No comments:
Post a Comment