அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஜிம்றோன் நகர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது தீ பரவல்-3 பேர் காயம்-Photos



மன்னார் எமிழ் நகர் கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட ஜிம்றோன் நகர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று(24) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக குறித்த வீட்டில் உறக்கத்தில் இருந்த தாய் மாற்றும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் அஜித்(வயது-15) என்ற சிறுவன் கடும் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் இன்று(25) திங்கட்கிழமை காலை மன்னார் வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தாய் மற்றும் இளைய மகன் ஆகியோர் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த வீட்டில் தாய் மற்றும் இரண்டு மகன்,இரண்டு மகள் ஆகிய ஐந்து பேரூம் நித்திரையில் இருந்த போது நேற்று(24) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு குறித்த வீட்டில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டதோடு குறித்த வீட்டின் மேல் போடப்பட்டிருந்த கூரை சீட் பாரிய சத்தத்துடன் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் வீட்டில் இருந்த பிள்ளைகள் கத்தி கூக்குரலிட அயலவர்கள் விரைந்து சென்று குறித்த வீட்டில் இருந்த ஐவரையும் காப்பாற்றியதோடு தீக்காயங்களுக்கு உள்ளான தாய் உட்பட மூன்று பேரையும் மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.இரண்டு மகள்களும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் உட்பட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உடமைகள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு இன்று(26) திங்கட்கிழமை காலை வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) முக்கியஸ்தர் ஜஸ்ரீன் ஆகியோர் நிலமையை பார்வையிட்டனர்.

பின் உடனடியாக குறித்த குடும்பத்திற்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி உதவிகளை வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மின் ஒழுக்கின் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















மன்னார் ஜிம்றோன் நகர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது தீ பரவல்-3 பேர் காயம்-Photos Reviewed by NEWMANNAR on May 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.