பீட்டர்சன் முச்சதம்; அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
முதல்தர கிரிக்கெட் போட்டியில் முச்சதம் விளாசியதன் மூலம் கெவின் பீட்டர்சனை இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு மீண்டும் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அந்நாட்டு தேர்வு குழு. இங்கிலாந்து தேசிய அணிக்காக தேர்வு செய்யப்படாமல் இருக்கும் கெவின் பீட்டர்சன்இ தற்போது சர்ரே கௌண்டி அணிக்காக விளையாடி வருகிறார். லேசெஸ்டெர்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் 326 ஓட்டங்களைக் குவித்து அனைவரது கவனத்தை யும் ஈர்த்துள்ளார். அதுவும் எதிர்வரும் நாட்களில் ஆஷஸ் தொடர் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இந்த முச்சதம் மூலம் தேசிய அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக பீட்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பீட்டர்சன் முச்சதம்; அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
Reviewed by Author
on
May 13, 2015
Rating:

No comments:
Post a Comment