129 ஆண்டுகளை கொண்டாடும் கொகா-கோலா
1886 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட தினம் முதல் 129 வருடங்களாக கொகா-கோலா தமது மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்துவருகின்றது.
இந்த சந்தோஷமான தருணத்தில் உலகத்திற்கு புத்துணர்வூட்டுவதான கொகா-கோலாவின் இலக்கினை நோக்கிய பயணத்தில் இணைந்திருந்த அத்தனை பேருக்கும் நிறுவனம் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.
உலகின் மிகப்பெரும் குளிர்பான நிறுவனமான கொகா-கோலா ஸ்தாபனத்தில் 3,500 ற்கும் மேற்பட்ட வகை தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுவதுடன், உலகளாவிய ரீதியில் 200 ற்கும் மேற்பட்ட நாடுகளில் 17 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வர்த்தக நாம பெறுமானத்தினை கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான நிறுவனத்தின் இலக்கினை நோக்கி வீறு நடைபோடும் நிறுவனமானது, தமது வர்த்தக நாமத்தின் தூண்களான - இலாபம், மக்கள், சேவைத்தொகுப்பு, பங்காளர்கள், பூகோளம் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் ஸ்திரமான வளர்ச்சியை பெறும் நோக்குடன் செயலாற்றுகின்றது.
“எம் வர்த்தக அடையாளங்களை நேசித்து அதற்கு ஆதரவளிப்பவர்கள் இன்றேல் எம்மால் இந்த மைல்கல்லை அடைந்திருக்கவே முடியாது. கொகா-கோலாவுடன் கடந்த 129 ஆண்டுகள் இணைந்திருந்தவர்கள் இன்றேல் உலகத்திற்கு புத்துணர்வூட்டுதலை எம்மால் மேற்கொண்டிருக்கவே முடியாது.
இந்த வருடம் முழுவதும் நாம் எமது வருடந்த கொண்டாட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றோம். அதன்போது இலங்கையில் மட்டுமல்லாது, உலகளாவிய ரீதியில் எம்முடன் இணைந்திருந்து கொகா-கோலா வர்த்தக நாமத்தினை இந்த இடத்திற்கு கொண்டு வந்த அனைவருக்கும் எமது நன்றியறிதலை தெரிவிக்க விளைகின்றோம்.
கொகா-கோலா வெறுமனே ஒரு பானம் மட்டுமல்ல. அது ஒரு கருத்தாக்கம், ஒரு இலக்கு, ஒரு உணர்வு. இணைப்புகளை, நீண்ட உறவுப்பிணைப்பினை, பகிர்ந்துகொள்ளப்படும் மகிழ்வான தருணங்களை அது குறியீடு செய்கின்றது. எமது பங்காளர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், கொகா-கோலாவை விரும்புபவர்கள் என அனைவரும் எமது வர்த்தக நாமத்தின் மீது ஏதோ ஒரு வகையில் தாக்கத்தினை செலுத்தி வந்துள்ளனர்.
அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியை இந்த வேளையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்” என கொகா-கோலா பெவரேஜஸ் ஸ்ரீலங்கா, தேசிய முகாமையாளர் கபில வெல்மில்லகே அவர்கள் குறிப்பிட்டார் இலங்கையில் மகிழ்ச்சியை பரப்புதல் இலங்கையில் கொகா-கோலாவின் பயணம் 59 வருடங்களுக்கு முன்னர் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமாகியது. அன்று முதன் முதலாக இலங்கையில் 300 மில்லிலீற்றர் கண்ணாடிப் போத்தலில் அளிக்கப்பட்ட பனிக்குளிர் பானத்தினை இலங்கையர்கள் சுவைக்கத்தொடங்கினர்.
இன்றோ, நாட்டின் குளிர்பான சந்தையில் அதிகளவானோர் விரும்பும் குளிர்பானத்தில் ஒன்றாக கொகா- கோலா விளங்குகின்றது. கொகா-கோலா வர்த்தக சின்னத்தின் அறிமுகத்தினை தொடர்ந்து ஏனைய சர்வதேச வர்த்தக சின்னங்களான கொகா-கோலா லைற், ஸ்ப்ரைட், ஃபேண்டா, மினிட் மெயிட் குளிர்பான வகைகள் உள்ளிட்ட பானத்தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இவை நாடளாவிய ரீதியிலுள்ள மக்களின் தாகத்தை தீர்த்து அவர்களுக்கு புத்துணர்வூட்டுகின்றன. உள்நாட்டை பொறுத்தவரையில் கொகா-கோலாவின் மாபெரும் வர்த்தக நாம சக்தியாக வாடிக்கையாளர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு, அவர்களை தொடர்ச்சியான ஊக்குவிப்புகள் மற்றும் நடவடிக்கைகளில் ஈர்த்துக்கொள்ளுதல் விளங்குகின்றது.
இலங்கையில் நிறுவனமானது, சித்திரைப் புதுவருடம் மற்றும் நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெறும் வேளையில் நுகர்வோருடன் சிறந்த தொடர்பாடலை பேணுகின்றது. கொகா-கோலா பாத்வே கிரிக்கட் முகாம்களின் ஊடாக நாட்டின் அடிமட்டத்தில் காணப்படும் கிரிக்கட் திறமையாளர்களை இனங்கண்டு அவர்களை வளர்த்தெடுக்கின்றது. ‘கோக் எக்க ரொக் வென்ன’ போன்ற இசை நிகழ்ச்சிகள் ஊடாக இளைஞர்களை அடைகின்றது.
அண்மையில் இடம்பெற்ற மக்கள் விருப்ப விருதுகள ; நிகழ்வில் தொடர்ச்சியாக 8ஆவது தடவையாக கொகா-கோலா ஆண்டுக்கான இளைஞர் குடிபான வர்த்தக நாமம் என்ற விருதினை பெற்றுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கொகா-கோலா முன்னெடுத்த உள்நாட்டு ஊக்குவிப்பான ‘சே இட் வித் கோக்’ ஆனது, அனைவராலும் விரும்பப்படும் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஊக்குவிப்பாக விளங்கியதுடன், இது குறித்து சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் தொடர்பாடல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
‘சே இட் வித் கோக்’ ஊக்குவிப்பானது, ஆங்கிலம், தமிழ், சிங்கள மொழிகளில் அச்சிடப்பட்ட 65 பிரபல சிறு தகவல் குறிப்புகளை கொகா-கோலா போத்தல்களில் தாங்கி வந்தது. இந்த ஊக்குவிப்பின் ஊடாக வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் தொடர்பாடுவதில் உள்ள இடைவெளியை தகர்த்து, தமது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில், கொகா-போத்தல் ஒன்றினை பகிர்ந்துகொள ;வதன் மூலம் வேடிக்கை, அக்கறை கலந்த தமது எண்ணத்தினை வெளிப்படுத்துவது இலகுவாக்கப்பட்டது.
பெண்களை மேம்படுத்தல், நீர், ஆரோக்கியம், மீள்சுழற்சி போன்ற எண்ணற்ற சமூக நடவடிக்கைகள், பேண்தகைமை நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கையில் மாற்றத்தினையும் மேற்கொண்டுள்ளது.
கொகா-கோலா – மக்களுக்கு சேவையாற்றும் நோக்குடன்: கொகா-கோலாவின் 2020 ஆம் ஆண்டை நோக்கிய இலக்கின் ஒரு கட்டமாக, நிறுவனமானது தமது கட்டடைப்பு வருவாயை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த 129 வருடங்களில் நிறுவனம் ஈட்டியதனை பத்து வருடங்களில் முன ;னெடுக்கவுள்ளதை இது குறிக்கின்றது. பெண்களை மேம்படுத்தும் நிறுவனத்தின் முனைப்பின் அடிப்படையில் கொகா-கோலா 5by20 நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. இது நிறுவனம்தமது பெறுமானச் சங்கிலியில் உள்ள ஐந்து மில்லியன் பெண் தொழில் முனைப்பாளர்களுக்கு 2020 ஆம் ஆண்டளவில் பொருளாதார வலுவினை அளிக்கும் சர்வதேச முனைப்பாகும்.
இலங்கையில் சமூக மற்றும் சுற்றுச்சூழல் முனைப்புகள்: 5by200 நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு கட்டமாக பெண்கள் தமது தொழில்முனைப்பு திறன்களை வளர்த்து, தமது குடும்பத்தினருக்கு ஆதரவளித்தவாறு, சிறப்பான வாழ்க்கை முறையினை பெற்றுக்கௌ்வதற்கு வழிவகுக்கும் மேம்படுத்தல் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இலங்கையில் கொகா-கோலா நான்கு முதன்மை காரணிகளை கருத்திற்கொண்டு செயற்திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக சுற்றுச்சூழல் தொடர்பில் தனது கவனத்தை வெளிப்படுத்துகின்றது. நீர் மேலாண்மை, ஸ்திரமான பொதியாக்கம், சக்தி முகாமைத்துவம் மற்றும் காலநிலை பாதுகாப்பு ஆகியனவே அவையாகும்.
நிறுவனமானது இலங்கையில் பல்வேறு நீர் சார்ந்த செயற்திட்டங்களை முன்னெடுக்கின்றது. வளங்களை செயற்திறனுடன் உபயோகித்தல் மற்றும் தூய்மையான உற்பத்தி நடைமுறைகள் ஆகிய பரப்புகளில் நிறுவனத்தின் உன்னதத்தன் வெளிப்படுத்தப்பட்டுள்ளமையை அங்கீகரித்து, அண்மையில் மதிப்பு மிகுந்த நான்கு விருதுகளை தேசிய தூய்மை உற்பத்தி மையத்திடமிருந்து (National Cleaner Production Centre - NCPC) பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் கொகா-கோலா நிறுவனமானது கிளிநொச்சியில் UN-Habitat இன் பங்குடமையுடன் 125 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைத்துக்கொடுத்தது. இதன் ஊடாக வரட்சியினால் பாதிக்கப்பட்ட அப்பிரதேசத்தை சேர்ந்த 1600 குடும்பங்களுக்கு சுத்தமான நீர் தற்போது கிடைக்கின்றது.
இது மாத்திரமல்லாமல், PET பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிக்கும் ஊக்குவிப்பு திட்டம் ஒன்றை முன்னெடுக்கும் கொகா-கோலா, பல்வேறு சுற்றுச்சூழல் சார் முனைப்புகளை நாடளாவிய ரீதியில் மேற்கொள்வதுடன், வருடாந்த உலக சுற்றுச்சூழல் தின விவாத நிகழ்ச்சிகள் ஊடாக பூலோகத்தை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தினை பாடசாலை மாணவர்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கின்றது.
கொகா-கோலாவின் சர்வதேச வரலாறு மற்றும் பாரம்பரியம்: 1886ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் அட்லாண்டாவை சேர்ந்த மருந்தாளரான கலாநிதி. ஜோன் எஸ். பெம்பர்ட்டன் (Dr. John S. Pemberton)அவர்களினால் தமது பங்காளரான ப்ராங் எம் ரொபின்சனுடன் (Frank M. Robinson) இணைந்து கொகா-கோலா முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.
கோலா விதைகளைக் கொண்டே இந்த பானம் உருவாக்கப்பட்டமையினால், அவர் அதற்கு கொகா-கோலா என பெயரிட்டார்.
விளம்பரப்படுத்தல்களுக்கு ஏற்புடையது என கருதியதால், அந்நாட்களில் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்ட கூட்டெழுத்து முறைமையான Spenserian script இன் அடிப்படையில் ரொபின்சன் அவர்கள் கொகா-கோலாவினை இரண்டு ‘ஊ’ க்களின் இணைப்பாக எழுதினார்.
129 வருடங்கள் கடந்தும், இன்றும் கொகா-கோலா அதே எழுத்து முறையைமயையே உபயோகிக்கின்றது. அன்று பயன்படுத்திய அதே உருவச்சின்னம், இன்றும் அன்றைய வர்த்தக நாம உறுதிப்பாடான தரம் மற்றும் புத்துணர்ச்சியை தொடர்ந்தும் வழங்குகின்றது.
கொகா-கோலா இதுவரைகாலமும் பல மறக்கமுடியாத விளம்பர ஊக்குவிப்புகளை முன்னெடுத்துள்ளதுடன் வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள், பாடல்கள் மற்றும் வேறு தளங்களின் ஊடாக இந்த வர்த்தக நாமத்தின் செய்தியான நேர்மறை எண்ணம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றினை மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளது.
தமது நுகர்வோரின் வாழ்க்கையுடன் தொடர்ச்சியாக நேயத்தினை காண்பிப்பதனாலேயே கொகா-கோலா இலங்கையில் மட்டுமல்லாது உலகத்திலேயே மிகப்பிடித்த குளிர்பானமாக உருமாற்றியுள்ளது. தொடர்ந்தும் தமக்கு ஆதரவளிக்கும் தமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளும் கொகா-கோலா, இனிவரும் ஆண்டுகளிலும் உலகிற்கு புத்துணர்வூட்டியவாறு, சிறப்பான தருணங்களை அனைவருக்கும் அளிக்கும் நோக்குடன் இயங்கி வருகின்றது.
129 ஆண்டுகளை கொண்டாடும் கொகா-கோலா
Reviewed by Author
on
May 13, 2015
Rating:

No comments:
Post a Comment