மன்னார்-சிலாபத்துறை பிரதான வீதியில் கல்லாற்று வெள்ள நீர் பெறுக்கெடுப்பு-போக்குவரத்து பாதிப்பு.-Photos
கல்லாறு பெறுக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் மன்னாரில் இருந்து சிலாபத்துறையூடாக புத்தளம் செல்லும் பிரதான வீதியின் போக்குவரத்துக்கள் இன்று(13) புதன் கிழமை காலை முதல் பாதிப்படைந்துள்ளது.
தற்போது தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாகவும்,குறிப்பாக தென்பகுதியில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாகவும் அப்பகுதியில் உள்ள மழை நீர் கல்லாற்றில் கலக்கப்பட்டுள்ளதன் காரணமாக வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கல்லாறு பெருக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் மன்னாரில் இருந்து சிலாபத்துறை வீதியூடான சகல போக்குவரத்துக்களும் காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளது.
வீதிக்கு குறுக்காக வெள்ள நீர் வேகமாக பாய்ந்து கொண்டிருக்கின்றது.
இதனால் மக்கள் போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியாத நிலையில் காத்து நிற்கின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.
மன்னார்-சிலாபத்துறை பிரதான வீதியில் கல்லாற்று வெள்ள நீர் பெறுக்கெடுப்பு-போக்குவரத்து பாதிப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 13, 2015
Rating:
No comments:
Post a Comment