மத ஒடுக்குமுறைக்கு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கண்டனம்
உலகின் சில பகுதிகளில் கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றமைக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது.
இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போது அதி வணக்கத்திற்குரிய மெல்கம் ரஞ்சித் கர்தினால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்படுவது குறித்து அதிகூடிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்யப்படுவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் உலகலாவிய ரீதியில் இவ்வாறான நடவடிக்கைகளினால் மத சுதந்திரம் ஒடுக்கப்படுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித வாழ்க்கை என்பது இறைவனால் வழங்கப்பட்ட மிகப்பெரிய கொடைகளுள் ஒன்றாக கருதப்படுகின்றது.
எனவே அவரவர் விரும்பிய கடவுளை வழிபடுவதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை வன்மையாக கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் அனைவரும் இறைவனிடம் மன்றாடி வேண்டிக் கொள்ள வேண்டும் என அதி வணக்கத்திற்குரிய மெல்கம் ரஞ்சித் கர்தினால் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத ஒடுக்குமுறைக்கு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கண்டனம்
Reviewed by NEWMANNAR
on
May 10, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 10, 2015
Rating:


No comments:
Post a Comment