இராணுவத்தினரை பலியிட்டு வெற்றிகொண்டவற்றை திருப்பிக்கொடுக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் : யுத்த வெற்றி நிகழ்வில் மஹிந்த
இராணுவத்தினரை பலியிட்டு வெற்றி கொண்ட பாரிய கடற்பரப்பினையும் இரண்டு மாகாணங்களையும் மீண்டும் திருப்பிக் கொடுக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
வடக்கில் தமிழ்த் தலைமைகள் சுதந்திரமாக நடமாடக் காரணமும் இராணுவத்தினரே. அவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒருவரிடமும் அனுமதி பெற வேண்டிய தேவை தமக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.
கொழும்பு விகார மஹாதேவி பூங்கா வளாகத்தில நேற்று இடம் பெற்ற யுத்த வெற்றி நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ, முன்னாள் ஆளுனர் அலவி மௌலானா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும, தினேஷ் குணவர்த்தன, டி.பி.ஏக்கநாயக்க, நாமல் ராஜபக் ஷ, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் முஸம்மில் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வு சுதந்திரத்தின் தீபவேலி என்று பெயரிடப்பட்டிருந்த அதேவேளை இந் நிகழ்வின் போது பெரும் எண்ணிக்கையிலான கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி,
எண்ணிலடங்காத இராணுவத்தினரை பலியிட்டு வெற்றிகொண்ட பாரிய கடல் பரப்பினையும் இரண்டு மாகாணங்களையும் மீண் டும் திருப்பிக் கொடுக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதுவரையில் புலிகளிடம் அடிபணிந்து கொண்டிருந்த அரசாங்கம் ஒன்றினையே காண முடிந்தது. அதற்கு மாறாக தேசியக் கொடியை கையிலேந்தி சுதந்நிர காற்றை சுவாசிக்க செய்தது எமது அரசாங்கமே.
நாம் ஒருபோதும் நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை நாட்டை காட்டிக் கொடுக்கும் ஒப்பந்தங்களும் செய்யவில்லலை எந்த ஒரு வெளிநாடும் எமது நாட்டினை தீண்டவும் ஒரு போதும் அனுமதி வழங்கவில்லை.
உலக நாடுகள் உணவுப் பஞ்சம். நிதிப்பற்றாக்குறை போன்றவற்றை எதிர்நோக்கிய போதும் அவ்வாறான நிலையினை எமது நாட்டவர் காண இடம் கொடுக்காது யுத்தத்தினையும் எதிர்கொண்டது எமது அரசாங்கம் மாத்திரமே. ஆனால் இன்று அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்கிறது புதிய அரசாங்கம். எமது அரசின் செயற்பாடுகளுடன் புதிய அரசின் செயற்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் வெட்கப்பட வேண்டிய நிலை புதிய அரசுக்கு ஏற்படும்.
அன்று வெளிநாடுகளில் உள்ள அதிவேக வீதிகளையும் பலமாடிக் கட்டடங்களையும் கண்டு வியந்த எமது நாட்டு மக்களுக்கு அவற்றை சொந்த நாட்டில் காணக்கூடிய சூழலை எமது அரசாங்கமும் இராணுவமும் தான் உருவாக்கிக் கொடுத்தன.
எதிர்காலத்தில் இலங்கையில் பிரிவினை வாதம் உருவாகவும் நாட்டின் தேசியத்தை சீர் குலைக்கவும் இனி எந்த ஒரு அமைப்பிற்கும் நாம் இடமளிக்கப் போவதுமில்லை. அதேவேளை இன்று வடக்கில் தமிழ் மக்களும் தமிழ்த் தலைமைகளும் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழலை உருவாக்கியதும் வடபகுதி மாணவர்களின் கரங்களில் இருந்த ஆயுதங்களுக்கு மாறாக அவர்களை புத்தகம் ஏந்தச் செய்ததும் இராணுவத்தினரே.
அதைவிடுத்து இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்கக் காரணமான ராஜீவ் காந்தியை கொலை செய்த புலிகளை அஞ்சலி செய்வது அவசியமற்றது. அதே வேளை இராணுத்தினரின் தியாகங்களை மறப்பதும் வெட்கப்பட வேண்டிய செயல் என்றார்.
இராணுவத்தினரை பலியிட்டு வெற்றிகொண்டவற்றை திருப்பிக்கொடுக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் : யுத்த வெற்றி நிகழ்வில் மஹிந்த
Reviewed by Author
on
May 19, 2015
Rating:
Reviewed by Author
on
May 19, 2015
Rating:

No comments:
Post a Comment