நான்கு கோடி ரூபாய்கள் பெறுமதி மிக்க கேரளா கஞ்சா சிலாவத்துறை பொலிசாரால் மீட்பு-Photos
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்புத்துறை பகுதியில் நான்கு கோடி ரூபாய்கள் பெறுமதி மிக்க கேரளா கஞ்சா கடந்த வியாழக்கிழமை(21) அல்லிராணி கோட்டைக்கு சற்று தொலைவில் கடற்கரையை அண்டிய பகுதியில் நிலத்திற்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சிலாவத்துறை பொலிசார் மீட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை அரிப்பு மக்கள் சிலாவத்துறை பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து குறித்த தினம் இரவு 8;:30 மணியளவில் உதவி பொலிஸ் அதிகாரி உப்பாலி அபேயரத்ன தலைமையிலான பொலிஸ் குழு குறித்த பகுதிக்குச் சென்று இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு குறித்த பகுதியில் நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டு மறைத்துவைத்திருந்த கேரளா கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.
குறித்த கஞ்சா பொதிகளின் மொத்த இடை 201 கிலோ 699 கிராம் ஆகும், சுமார் ஒவ்வொன்றும் இரண்டு கிலோ எடைகொண்ட 95 பொதிகள் பத்து உரபைகளில் கட்டப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே அவை பொலிசாரால் கைப்பற்றபட்டுள்ளது. இதன் பெறுமதி இலங்கை ரூபாய்களில் நான்கு கோடியாகும்.
எனினும் குறித்த கேரளா கஞ்சா சம்பந்தமாக சந்தேகதத்தின் பேரில் இது வரையில் எவரும் கைது செய்யப்படவில்லை இது தொடர்பாக சிலாவத்துறை பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த கேரளா கஞ்சா பொதிகளை நாளை மறுதினம் திங்கள்கிழமை(25) மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்க பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்டகாலமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நான்கு கோடி ரூபாய்கள் பெறுமதி மிக்க கேரளா கஞ்சா சிலாவத்துறை பொலிசாரால் மீட்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
May 25, 2015
Rating:
No comments:
Post a Comment