இலங்கை தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்த புதிய அரசியல் அணி!- மனோ கணேசன்
இலங்கையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை இணைந்து புதிய அணி ஒன்றை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் எழுப்பி வருகிறது.
எனினும் வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பு குரல் கொடுப்பதில்லை.
எனவேதான் முழுத் தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அரசியல் அணி ஒன்றை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்
இலங்கையில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் உரிமைகள் உள்ளன என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
இலங்கை தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்த புதிய அரசியல் அணி!- மனோ கணேசன்
Reviewed by Author
on
May 30, 2015
Rating:
Reviewed by Author
on
May 30, 2015
Rating:

No comments:
Post a Comment