வில்பத்து சரணாலய காணிகள் முசலி பிரதேசத்தில் மக்களுக்கு பிழையான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை-ஹீனைஸ் பாரூக் எம்.பி.-Photos
வில்பத்து சரணால காணி முசலி பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்கு பிழையான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பொய்யான பிரச்சாரங்கள் பலரினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக் தெரிவித்துள்ளார்.
முசலியில் இன்று திங்கட்கிழமை(11) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
வில்பத்து சரணாலயம் முசலி பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்கு பிழையான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பொய்யான பிரச்சாரங்கள் பலரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும்,முசலி பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்ற வகையிலும் அக்கருத்து பிழையான கருத்து என கூறுவது மாத்திரமின்றி குறித்த கருத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.
வில்பத்து சரணாலயத்திற்கு ஒரு எல்லை இருக்கின்றது. 'மோதரகம ஆறு' என்ற ஆறு தான் வில்பத்து சரணாலயத்திற்கான எல்லையாக உள்ளது.
ஆற்றிற்கு அப்பாற்பட்ட பிரதேசத்தில் தான் 1990 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த குடும்பமும்,தற்போது இருக்கின்ற குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் குடியேற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.
எனவே இங்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பது என்பது முறைப்படி வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் முறைப்படி அத்திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டு பிரதேசச் செயலாளரினூடாக மக்களுக்கு முறையாக கையளிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று அரசிற்கு சொந்தமான காணிகள்,அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இங்கு வாழ்கின்ற மக்களுக்கு ½ ஏக்கர் காணி வீதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
அது தனி முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல.தமிழ்,சிங்கள குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இதில் கடற்படையினரினாலும், இராணுவத்தினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்கு உற்பட்ட கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கே அதிகளவான காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அதே போல் சுமர் 735 ஏக்கர் முள்ளிக்குளம் காணியும்,சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட சிலாபத்துறை காணியும்,அதே போன்று சிங்கள மக்களுக்கு சொந்தமான கஜிவத்தை காணியும் படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றீடாகவே குறித்த இடங்களில் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக தனியார் யாருக்கும் காணிகள் வழங்கப்பட்டிருந்தால்,அல்லது அவர்கள் பிடித்திருந்தால் அதனை பரிசீலிப்பதும்,அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கும் நாங்கள் ஆட்சேபனை இல்லை.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசின் அடிப்படையில் மாத்திரமே இக்காணிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதனை கூறிக்கொள்ள விரும்புவதோடு வில்பத்து சரணாலயம் முசலி பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்கு பிழையான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பொய்யான கருத்தை கண்டிப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக் மேலும் தெரிவித்துள்ளார்.
வில்பத்து சரணாலய காணிகள் முசலி பிரதேசத்தில் மக்களுக்கு பிழையான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை-ஹீனைஸ் பாரூக் எம்.பி.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 11, 2015
Rating:
No comments:
Post a Comment