மன்னார் பாப்பாமோட்டை பகுதியில் அமைக்கப்பட்டு வந்த திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறந்து வைப்பு.-Photos
உலக வங்கியின் நிதி உதவியுடன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையினால் மன்னார் பாப்பாமோட்டை பகுதியில் அமைக்கப்பட்டு வந்த திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் நேற்று (15) வெள்ளிக்கிழமை மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி ஒதுக்கீடு செய்த 47 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையினால் பாப்பாமோட்டை பகுதியில் 4 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியில் பசளை தயாரிப்பதற்கான திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் அமைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் குறித்த நிலையம் நேற்று(15) வெள்ளிக்கிழமை மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,உப தலைவர்,ஜேம்ஸ் ஜேசுதாஸ்,நகர சபை உறுப்பினர்கள்,மன்னார் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.துரம்,மன்னார் நகர சபையின் செயலாளர் லெனாட் பிரிட்டோ,தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மன்னார்-வவுனியா மாவட்டங்களுக்கான பொறியியலாளர் உதயசீலன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
மன்னார் பாப்பாமோட்டை பகுதியில் அமைக்கப்பட்டு வந்த திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறந்து வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 16, 2015
Rating:

No comments:
Post a Comment