புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடும் அரசாங்கம்

புலம்பெயர் தமிழர்களின் சர்வதேச மா நாடு ஒன்றை கொழும்பில் நடத்த வெளிவிவகார அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்தை பாராட்டும் அதேவேளை வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பிரதேசங்களிலும் எமது இராணுவ வீரர்களின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக் கைகளை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவது இல்லை என பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழர்களை மட்டும் சந்தோஷப்படுத்துவதில் இந்த அரசு மும்முரமாக செயற்படுவதனை தவிர்த்து எமது பல்லாயிரக் கணக்கான இராணுவ வீரர்களின் உயிர் தியாகங்களின் அர்ப்பணிப்பினால் கிடைக்கப்பெற்ற தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிவிடக்கூடாது எனவும் சுட்டிகாட்டினார்.
கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா பௌத்த அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைப்பின் பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
புதிய அரசின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் லண்டன் மாநாட்டில் புலம்பெயர் தமிழர்களுடனான அல்லது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடனான பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என்பது தொடர்பில் எமக்கு எவ்வித தெளிவான தகவல்களும் இல்லை. இது தொடர்பில் அரசானது அனைத்து மக்களுக்கும் விளக்கமளிப்பது அவசியம்.
இவ்வாறான நிலையில் வெளிவிவகார அமைச்சர் எமது நாட்டிலிருந்து வெளியேறிய நாட்டுப் பற்றுள்ள புலம்பெயர் தமிழர் களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருக்கும் பட்சத்தில் அதனை நாம் பாராட்டு கின்றோம். அவ்வாறே எமது நாட்டின் யுத்த காலப்பகுதியிலும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் எமது நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மட்டுமல்ல பௌத்த, சிங்கள மற்றும் முஸ்லிம், கிறிஸ்தவ மக்களை மீள குடியேற்றும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்குமாயின் அவை மிகவும் பாராட்டத்தக்கது.
சிறுபான்மை இன சமூகம் தொடர்பில் அக்கறை செலுத்தும் இந்த அரசானது பௌத்த சிங்கள மக்களையும் எமது இராணுவ வீரர்களையும் மறந்து செயற்படக் கூடாது. எமது நாட்டில் காணப்பட்ட முப்பது வருட கால கொடிய யுத்தத்தை பயங்கரவாதிகளுக்கு எதிராக பல்வேறு உயிர் தியாகங்களின் மத்தியில் எமது இராணுவத்தினர் வென்றெடுத்தனர். அதனை ஒரு போதும் மறந்து எந்த ஒரு அரசும் செயற்படக் கூடாது.
மறுபுறம் இன்று எமது நாட்டில் சுதந்திரமானதொரு நிலையில் தேசிய பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புலம்பெயர் தமிழர்கள் உட்பட வெளிநாடுகளில் வாழும் டயஸ்போரா என்ற பதங்க ளில் அடங்கும் தரப்பினர்களின் செயற்பாடுகள் காரணமாக எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய் ப்புக்கள் இருக்க கூடாது. இந்த விடயங்க ளில் அரசானது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் வாக்கினை செலுத்தினார்கள் என்ற ஒரே காரணத் திற்காக வடக்கு, கிழக்கில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகள் தலை தூக்குவதற்கு இடமளிக்க முடியாது. இவை தொடர்பிலும் அரசு அவதானத்துடன் செயற்பட வேண் டும்.
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் எமது நாட்டில் முற்று முழுவதுமாக ஒழிக்கப்பட்டாலும் ஏனைய உலக நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. ருத்திரகுமாரன் போன்ற சில தரப்பினர் இன்னும் செயற்படுவதோடு இயக்கங்களுக்கு தேவையான பணமும் சேகரிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் எமது நாட் டின் தேசிய பாதுகா ப்பு தொடர்பில் எல்லா சந்தர்ப்பங்களி லும் அரசானது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் செயற்பாடுகள்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் செயற்பாடுகளானது எமது பௌத்த மக்களுக்கு எதிரானதாகவே எல்லா சந்தர்ப்பங்களிலும் காணப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் எமது நாடு யாருடையது என்று எனக்கு தெரியாது என்ற கருத்தொன்றை அவர் தெரிவித்திருந்தார்.
உண்மையில் அவருடைய நாடு எது அவரின் பூர்வீகம் என்ன என்பது குறித்தும் அவருக்கு தெரியாது. கள்ளத் தோணியொன் றில் இலங்கைக்கு வந்த பூர்வீகத்தை சேர்ந்தவர் என்றே அவரை குறிப்பிட வேண்டும். இந்த காலகட்டங்களில் அவரின் ஆலோசனைகளோ, செயற்பாடுகளோ எமது நாட்டுக்கு தேவைப்படாது என்பதனை அவர் புரிந்துக்கொள்ள வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு
வடக்கு, கிழக்கு பகுதியில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையில் இராணுவ முகாம்கள், விகாரைகளை அகற்றும் வகையில் போராட்டங்களை மேற்கொள்வதிலேயே மும்முரமாக செயற்படுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளை நாம் தென்னிலங்கையில் முன்னெடுத்தால் என்ன நட க்கும் என்பதை தமிழ் தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத் தல் ஏற்படும் வகையில் இவர்களின் செயற்பாடுகள் அமையக் கூடாது என்றார்
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடும் அரசாங்கம்
Reviewed by Author
on
June 17, 2015
Rating:

No comments:
Post a Comment