அண்மைய செய்திகள்

recent
-

புலம்பெயர்ந்தோருக்கான அரசாங்கத்தின் அழைப்பு வரவேற்கத்தக்கது; டக்ளஸ்


புலம்­பெயர் தமிழ் மக்கள் தொடர்பில் இந்த அரசு கொண்­டி­ருக்கும் நல்­லெண்ணப் போக்கு வர­வேற்­கத்­தக்­கது என ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செய­லாளர் நாயகம் டக்ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­துள்ளார்.

இவ்­வி­டயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இலங்கை நாட்டில் தேசிய நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும், பொரு­ளா­தார மேம்­பாட்டை எட்­டு­வ­தற்கும் புலம்­பெயர் தமிழ் மக்­களின் பங்­க­ளிப்­பு­களும் இன்­றி­ய­மை­யா­தவை.

இதனை விரைந்து முன்­னெ­டுப்­ப­தற்கும், புலம்­பெயர் அமைப்­புக்கள் சில­வற்றின் மீதான தடைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றை அகற்­று­வது தொடர்­பிலும் இந்த அரசு நட­வ­டிக்கை எடுக்­கு­மென நம்­பு­கிறேன்.

புலம்­பெயர் தமிழ் மக்­க­ளுடன் அரசு பேச்­சு­வார்த்­தைகள் நடத்தி, அவர்­க­ளையும் எமது நாட்டின் வளர்ச்­சியில் இணைத்துக் கொள்­வது ஆரோக்­கி­ய­மான செயற்­பா­டாகும். புலம்­பெயர் தமிழ் சமூ­கத்தின் அறிவு மற்றும் ஆற்­றல்­களை நாம் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். புலம்­பெயர் தமிழ் மக்­க­ளது உணர்­வு­களை வென்­றெ­டுப்­பதன் மூலமே இது சாத்­தி­ய­மாகும்.

தமிழர் தாயகப் பகு­தி­களில் பல்­வேறு முத­லீ­டு­களைப் பெறவும், அதன் ஊடாக எமது மக்­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வ­தற்கும், இதனால் வழி­யேற்­படும் என்ற நம்­பிக்கை எமக்­குண்டு. தமிழர் தாயகப் பகு­தியின் பொரு­ளா­தார மேம்­பாட்­டிற்கும் புலம்­பெயர் தமிழ் மக்­களின் பங்­க­ளிப்­புக்கள் பாரிய துணை­யாக அமையும்.

எனவே, இந்த அரசு மேற்­கொண்­டுள்ள இந் நட­வ­டிக்கை பாராட்­டுக்­கு­ரி­யதும், வர­வேற்­கத்­தக்­க­து­மாகும். அதே நேரம், குறிப்­பிட்ட சில புலம்­பெயர் அமைப்­புக்­க­ளுடன் மாத்­திரம் இவ் விடயம் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தாமல், ஏற்­க­னவே நாட்டின் நெருக்­க­டி­மி­குந்த கால­கட்­டங்­க­ளில்­கூட எமது நாட்டின் தேசிய நல்­லி­ணக்­கத்­திற்கும், தமிழ் மக்­களின் நலன்கள் கரு­தியும் உதவ முன்­வந்­தி­ருந்த பல புலம்­பெயர் தமிழர் அமைப்­புக்­க­ளையும் இணைத்து, பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு இலக்­குகள் எட்­டப்­பட வேண்டும். அதன் மூலமே இம் முயற்சி பூர­ணத்­துவம் பெறு­வ­தாக அமையும்.

புலம்­பெயர் தமி­ழர்­களை இவ்­வாறு இணைத்­துக்­கொண்டு, எமது நாட்டின் மேம்­பாடு தொடர்பில் செயற்படுவது குறித்து இனவாதக் கருத்துக்கள் உண்டு. இதனை அகற்றும் வகையில் சிங்கள மக்களிடையே உரிய தெளிவுகள் ஏற்படுத்தப்பட்டு, பரஸ் பர நம்பிக்கைகள் வலுப்பெறச் செய்வது அவசியமாகும் என்றார்.
புலம்பெயர்ந்தோருக்கான அரசாங்கத்தின் அழைப்பு வரவேற்கத்தக்கது; டக்ளஸ் Reviewed by Author on June 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.