அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தனை ஓரம்கட்டிவிட்டு விக்கியை தலைவராக்க முயற்சி : பொதுபலசேனா


நல்­லி­ணக்கம் பற்றி பேசும் தமிழ் அர­சியல் தரப்பு வட மாகாண சபையில் இன­வாத பிரே­ர­ணை­யினை நிறை­வேற்­றி­யி­ருப்­பது நாட்­டிற்கு மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­த­லென தெரி­விக்கும் பொது­பல சேனா சம்­பந்­தனை பின் தள்­ளி­விட்டு வட மாகாண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக்­கவே புலம்­பெயர் சர்­வ­தேச அமைப்­புக்கள் முயற்­சிப்­ப­தா­கவும் குற்றம் சுமத்­தி­யது.

பொது­பலசேனா அமைப்­பினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவ் அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பிட்­டதாவது;

வட மாகாண சபையின் செயற்­பா­டுகள் அண்மைக் காலங்­களில் மிகவும் மோச­மா­ன­தா­க­வுள்­ளன. இன­வாத பிரி­வி­னைக்கு தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் வட மாகாண சபையும் முயற்­சிக்­கின்­றது என்­பது அண்­மையில் வட­மா­காண சபையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையின் மூலம் தெரி­வந்துள்­ளது.

கடந்த காலத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்­சியில் வட மாகா­ணத்தை சரி­யாக கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­தி­ருந்தார். யுத்­தத்தை வென்­ற­வுடன் வடக்­கிற்கு உரிய பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்டு கட்­டுப்­பாட்டின் கீழ் இருந்­தது. ஆனால் தற்­போது நிலைமை மாறி­விட்­டது.

பழைய சூழ்­நிலை உரு­வா­கின்­றது

ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­துடன் நாட்டின் நிலை­மைகள் மீண்டும் பின்­நோக்கி நகர்­கின்­றன. 2002ஆம் ஆண்டில் நாடு எவ்­வா­றா­ன­தொரு அர­சியல் சூழ்­நி­லையில் இருந்­ததோ அவ்­வா­றா­ன­தொரு நிலைமை தற்­போது மீண்டும் உருவாகி வரு­கின்­றது. அன்று மகிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தியின் ஆட்­சியில் பூனைகள் போல் பதுங்கி கொண்ட வட மாகாண சபை இன்று மீண்டும் புலி­க­ளாக மாற ஆரம்­பித்து விட்­டது. வட­மா­காண சபையில் தற்­போது கொண்டு வரப்­பட்­டுள்ள தீர்­மா­ன­மா­னது இலங்­கைக்கு மிகவும் அச்­சு­றுத்­த­லான ஒன்­றாகும். இவ்­வி­ட­யத்­தினை சாதா­ர­ண­மாக எடுத்­துக்­கொண்டால் நாடு பாதா­ளத்தின் பக்­கமே கொண்டு செல்­லப்­படும்.

விக்கி பக்கம் சர்­வ­தேசம்

வட மாகாண சபையின் இனப்­ப­டு­கொலை தொடர்பில் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டமை சர்­வ­தே­சத்­தினை மகிழ்­விக்­கவேயாகும். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் அமைதி காக்­கின்ற நிலையில் கூட்­ட­மைப்பின் தலை­மையில் இருந்து சம்­பந்­தனை ஓரங்­கட்­டி­விட்டு சி.வி.விக்­னேஸ்­வ­ரனை கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக்கும் முயற்­சிகள் சர்­வ­தேச மற்றும் புலம்­பெயர் புலி அமைப்­பு­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இன்னும் சிறிது காலத்தில் இது நடந்தே தீரும்.

எமக்கு எதி­ராக அடக்­கு­முறை

அதேபோல் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்­சியில் பொது­பல சேனா அமைப்­பிற்கு இடம் வழங்­கப்­பட்­டது. எமது கருத்­துக்­களை முன்­வைக்­கவும் அநி­யா­யங்­களை தட்­டிக்­கேட்­கவும் வாய்ப்பு வழங்­கப்­பட்­டது. ஆனால், புதிய அரசில் பெளத்­தமும் எமது அமைப்பும் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

நாம் பௌத்த அமைப்பாக செயற்படுவது தவறெனி வட மாகாண சபையின் செயற்பாடுகளை என்னவென்று கூறுவது?குற்றம் சுமத்தி எம்மை புறக்கணித்து விட்டு பிரிவினையினை தூண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வட மாகாண சபைக்குமே அரசாங்கம் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பந்தனை ஓரம்கட்டிவிட்டு விக்கியை தலைவராக்க முயற்சி : பொதுபலசேனா Reviewed by Author on June 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.