மன்னார் சர்வோதயத்தின் பங்குபற்றலுடன் மார்ச் 12 பிரகடன கையெழுத்து வேட்டை..!!
மன்னார் நகரத்தில் நேற்று சனிக்கிழமை (27 மாபெரும் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.
மன்னார் சர்வோதைய அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் குறித்த கையொழுத்து வேட்டை இடம் பெற்றது.
''அரசியல்வாதிகளுக்கு வேட்பு மனு வழங்கும் போது கருத்திற் கொள்வதற்கு அரசியல் கட்சிகள் இணங்கிய பொதுவான அளவுகோல்கள்'' என்னும் கணிப்பீட்டு ஒப்பந்தத்தில் பல சிரேஸ்ட அரசியல் வாதிகளும் பல கட்சிகளைச் சேர்ந்தோரும் கையெப்பமிட்டுள்ளனர்.
இவ் பிரகடனத்தினை 'மார்ச் 12 பிரகடனம்' என அழைக்கப்படுகின்றது.
அந்த வகையில் இவ் பிரகடனத்தில் உள்ள அனைத்து அளவு கோல்களினையும் நாட்டின் பிஜைகள் வாசித்து புரிந்து கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்காக கையெழுத்து வேட்டை நாடு பூராகவும் தொடராக இடம் பெற்றது.
அந்த வகையில் மன்னார் தினயார் பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று சனிக்கிழமை(27) காலை 11.35 மணி தொடக்கம் 2.30 வரை இவ் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.
இதன் போது சர்வமத தலைவர்கள்,மக்கள்,அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு கையெழுத்துக்களை வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் சர்வோதயத்தின் பங்குபற்றலுடன் மார்ச் 12 பிரகடன கையெழுத்து வேட்டை..!!
Reviewed by NEWMANNAR
on
June 28, 2015
Rating:

No comments:
Post a Comment