சின்னம் தொடர்பில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் கட்சிகள் முன்கூட்டி அறிவிக்க வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய
கட்சிகளின் சின்னம் தொடர்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் அது குறித்து கட்சிகள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் வேறும் சின்னமொன்றை தெரிவு செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தால் அது குறித்து அறிவிக்க வேண்டும்.
எதிர்வரும் சனிக்கிழமைக்கு முன்னதாக அறிவிக்க தேர்தல் திணைக்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்.
ஏதேனும் ஓர் கட்சி கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி போட்டியிடுகின்றது என்றாலும் அது குறித்து அறிவிக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சின்னம் தொடர்பில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் கட்சிகள் முன்கூட்டி அறிவிக்க வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய
Reviewed by NEWMANNAR
on
June 28, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 28, 2015
Rating:


No comments:
Post a Comment