பதிவுத் தபால் விநோயகம் வழமைக்குத் திரும்பவுள்ளது
மத்திய தபால் பரிமாற்றகத்தில் குவிந்துள்ள பதிவுசெய்யப்பட்ட தபால்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக தபால் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த வாரஇறுதியில் மத்திய தபால் பரிமாற்றகத்தில் குவிந்துள்ள அனைத்து தபால்களும் பகிர்ந்தளிப்பதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன சுட்டிக்காட்டினார்.
மத்திய தபால் பரிமாற்றகத்தில் குவிந்துள்ள பதிவுசெய்யப்பட்ட தபால்கள் விநியோகிக்கப்படாமையால், கடிதங்களை உரியநேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஊழியர்கள் பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணமென தபால் மாஅதிபர் கூறினார்.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன மேலும் கூறினார்.
பதிவுத் தபால் விநோயகம் வழமைக்குத் திரும்பவுள்ளது
Reviewed by NEWMANNAR
on
June 19, 2015
Rating:

No comments:
Post a Comment