ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தாழமுக்கத்தில் சிக்கியது
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தாழமுக்கத்தில் சிக்கியது.

எவ்வாறாயினும், பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
193 பயணிகளையும் 16 பணியாளர்களையும் ஏற்றிச்சென்ற ஶ்ரீலங்கன் விமான நிலையத்திற்கு சொந்தமான யூ.எல்.564 விமானம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இருந்து இலங்கைக்கு பயணித்துக்கொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியது.
விமானம் இலங்கை வான் எல்லையை அடைந்த பின்னர் திடீரென தாழமுக்கம் ஏற்பட்டதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
அதிகாலை 5.21 அளவில் யூ.எல்.564 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதுடன், காயமடைந்த பணியாளர்கள் நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விமானத்தை செலுத்திய பிரதான விமானி 20 வருட அனுபவமுள்ளவர் என்பதுடன், துணை விமானியும் 20 வருட அனுபவம் பெற்றவர்.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு அறிக்கைகளை ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தாழமுக்கத்தில் சிக்கியது
Reviewed by NEWMANNAR
on
June 19, 2015
Rating:

No comments:
Post a Comment