டக்ளஸின் பாதுகாப்பிற்கு ஸ்ரீதர் தியேட்டருக்கு முன்னால் போடப்பட்ட வேகத்தடை நீக்கம்!

டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய பாதுகாப்பிற்காக பல்வேறு உண்மைக்கு புறம்பான காரணங்கள் கூறி யாழ். ஸ்ரீதர் தியேட்டருக்கு முன்னால் வீதியில் போடப்பட்டிருந்த வேகத்தடை சில நாட்களுக்கு முன்னர் அகற்றப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியிலுள்ள ஸ்ரீதர் தியேட்டருக்கு முன்னால் வேகத்தடை போடப்பட்டது.
எனினும் குறித்த வீதித்தடை போடப்பட்டமைக்கு அதிக விபத்தே காரணம் என்று அதிகாரிகளால் கூறப்பட்டது.
ஆனால் அந்தப் பகுதியில் அதிகரித்த விபத்து சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரியவில்லை.
எனினும் அப்போது ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்தமையால் அவருடைய பாதுகாப்புக் கருதியே குறித்த தடை போடப்பட்டதாக பலர் பேசிக் கொண்டனர்.
அதனை உண்மைப்படுத்தும் வகையில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் டக்ளஸ் தேவானந்தாவை மைத்திரி அரசு கண்டுகொள்ளவே இல்லை.
அமைச்சர், டக்ளஸ் தேவானந்தா முன்னாள் அமைச்சரானார்.
இந்தநிலையிலேயே குறித்த வேகத்தடை சில நாட்களுக்கு முன்னர் அகற்றப்பட்டுள்ளது என்றும் மீண்டும் பலர் பேசிக் கொள்கின்றனர்.
டக்ளஸின் பாதுகாப்பிற்கு ஸ்ரீதர் தியேட்டருக்கு முன்னால் போடப்பட்ட வேகத்தடை நீக்கம்!
Reviewed by Author
on
June 08, 2015
Rating:

No comments:
Post a Comment