
உலகளவில் 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
2015வது ஆண்டுக்கான அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்கள் என்ற அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
அமெரிக்க குத்துச் சண்டை வீரரான மேவெதர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் வருமானம், 300 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த 4 வருடங்களில் 3வது முறையாக மேவெதர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
160 மில்லியன் டொலர் வருமானம் பெறும் குத்துச்சண்டை வீரர் போக்குயிடோ இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 79.6 மில்லியன் பெற்று கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ 3வது இடத்தில் உள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் டோனி 23வது இடம் பிடித்துள்ளார். 4 மில்லியன் டொலர் சம்பளமாகவும், 27 மில்லியன் டொலர் விளம்பரம் போன்ற இதர வருமானமும் சேர்த்து 31 மில்லியன் டொலர் பெறுகிறாராம். இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே இடம் பிடித்த இந்திய வீரர் டோனி மட்டுமே.
டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா உட்பட 2 பெண்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment