அமைச்சருக்கு ஆபாசப் படங்கள் அனுப்பிய பிக்கு கைது

விiளாயட்டுத் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் கையடக்கத் தொலைபேசிக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய பௌத்த பிக்கு ஒருவர் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கிருலப்பனையில் உள்ள விகாரை ஒன்றில் கடமையாற்றி வந்த அம்பாறையை பிறப்பிடமாக கொண்ட பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து மஜிஸ்திரேட் நீதவான் பிரியன்த லியனகேவினால் 2500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனது கையடக்கத் தொலைபேசிக்கு இனந் தெரியாத நபர்களால் ஆபாச படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்தே குறித்த பிக்கு கைது செய்யப்பட்டதோடு அவரிடமிருந்து ஆபாசப்படம் அனுப்பப்பட்ட கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அமைச்சருக்கு ஆபாசப் படங்கள் அனுப்பிய பிக்கு கைது
 Reviewed by Author
        on 
        
June 19, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 19, 2015
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
June 19, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 19, 2015
 
        Rating: 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment