அண்மைய செய்திகள்

recent
-

ஆரம்ப பிரிவை ஆரம்பிக்குமாறு கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம்


நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவை ஆரம்பிக்குமாறு கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட ஆயிரம் பாடசாலைகளின் கீழ் ஒவ்வொரு பாடசாலைகளிலும் தனியான ஆரம்ப பிரிவு ஆரம்பிக்கப்பட்டு அதற்கு தனியான அதிபர் நியமிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயமும் ஆயிரம் பாடசாலைகளில் இணைக்கப்பட்ட போதிலும் இப்பாடசாலைக்கான ஆரம்ப பிரிவு இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.

இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவை ஆரம்பிக்குமாறு நோர்வூட் பிரதேச பெற்றோர்கள் பல முறை சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று காலை 10 மணியளவில் குறித்த பிரதேச பெற்றோர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு நோர்வூட் நகரம் வரை சென்று மீண்டும் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆரம்ப பிரிவை ஆரம்பிக்குமாறு கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் Reviewed by Author on June 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.