இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 26 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளை சேர்ந்த மீனவர்களே மூன்று படகுகளில் இன்று (21) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் இந்திக்க சில்வா தெரிவிக்கின்றார்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்றுள்ள 26 இந்திய மீனவர்களையும் காங்கேசன்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட பணிமனை அறிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் கைது
Reviewed by NEWMANNAR
on
June 22, 2015
Rating:

No comments:
Post a Comment