அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பாப்பாமோட்டையில் காவலாளியான வயோதிபர் கொலை.-Photo



மன்னார் பாப்பாமோட்டை பகுதியில் அமைந்துள்ள கள்ளுத்தவரணை ஒன்றின் காவலாளியாக கடமையாற்றிய வயோதிபர் ஒருவர் இன்று(20) சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஆரோக்கியம் பேதுரு(வயது-73) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அடம்பன் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பாப்பாமோட்டை பகுதியில் அமைந்துள்ள குறித்த கள்ளுத்தவரணையில் குறித்த வயோதிபர் காவலாளியாக கடமையாற்றி வந்ததுள்ளார்.

இந்த நிலையில் குறித்த கள்ளுத்தவரணையில் உள்ள தனது படுக்கையரையில் அன்றைய தினம் தங்கியுள்ளார்.

இந்த நிலையிலே குறித்த காவலாளியான வயோதிபர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு இன்று (20) சனிக்கிழமை மதியம் சென்ற அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் மன்னார் மாவட்ட நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதோடு சடலத்தை சடலப்பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார்

இந்நிலையில் இன்று(20) சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் குறித்த சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

விசாரணைகளை மேற்கொண்ட அடம்பன் பொலிஸார் காவலாளியான குறித்த வயோதிபரின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பாப்பாமோட்டையில் காவலாளியான வயோதிபர் கொலை.-Photo Reviewed by NEWMANNAR on June 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.