அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை குடிமக்கள் தாய் நாட்டிற்கு அனுப்பிய பணம் எவ்வளவு? வெளியான புள்ளிவிபரம்


ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட குடிமக்கள் தங்களின் தாய்நாடுகளுக்கு அனுப்பியுள்ள பணம் தொடர்பான புள்ளிவிபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் குடியேறி பணிபுரிந்து வரும் வெளிநாட்டினர்கள் கடந்த 2014ம் ஆண்டு தங்களது தாய் நாடுகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பியுள்ளார்கள் என்ற புள்ளிவிபரத்தை International Fund for Agricultural Development (IFAD) நேற்று வெளியிட்டது.

இந்த புள்ளிவிபரத்தில், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு கடந்தாண்டு அனுப்பப்பட்ட ஒட்டு மொத்த தொகையானது 109 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இவற்றில் சுமார் 20.6 பில்லியன் டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதில் ரஷ்ய கூட்டமைப்பு முதல் இடம் பெறுகிறது.

இரண்டாவதாக, பிரித்தானியாவிலிருந்து 17.1 பில்லியன் டொலர்களும், மூன்றாவதாக, ஜேர்மனியிலிருந்து 14 பில்லியன் டொலர்களும், நான்காவதாக, பிரான்ஸிலிருந்து 10.5 பில்லியன் டொலர்களும், ஐந்தாவதாக, இத்தாலியிலிருந்து 10.4 பில்லியன் டொலர்களும், ஆறாவதாக, ஸ்பெயினிலிருந்து 9.6 பில்லியன் டொலர்களும் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு வெளியான புள்ளிவிபரத்தின்படி, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இலங்கை குடிமக்கள் தங்களது தாய் நாட்டிற்கு அனுப்பிய பணம் 6.8 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்த தொகையானது கடந்த 2012ம் ஆண்டை விட 13 சதவிகிதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

2014ம் ஆண்டு ஐரோப்பா நாடுகளில் பணிபுரியும் இலங்கை குடிமக்கள் தங்களது தாய் நாட்டிற்கு சுமார் 1,500 மில்லியன் டொலர்கள் அனுப்பியுள்ளனர்.

அதே போல், ஐரோப்பாவில் பணிபுரியும் இந்திய குடிமக்கள் தங்களது தாய் நாட்டிற்கு சுமார் 5,747 மில்லியன் டொலர்கள் அனுப்பியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து அந்நாடுகளிலிருந்து அதிக அளவில் பணம் பெறும் வெளிநாடுகளின் பட்டியலில் நைஜீரியா(7412 மில்லியன் டொலர்கள்) முதல் இடத்திலும், 6297 மில்லியன் டொலர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 6168 மில்லியன் டொலர்களில் மொரோக்கோ மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதே பட்டியலில் இந்தியா 4-வது இடத்திலும், இலங்கை 17-வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை குடிமக்கள் தாய் நாட்டிற்கு அனுப்பிய பணம் எவ்வளவு? வெளியான புள்ளிவிபரம் Reviewed by Author on June 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.