சீனாவில் இருந்து ஹவாயை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய சூரிய சக்தி மூலம் இயங்கும் விமானம்: தொடர்ந்து 5 நாட்கள் பயணம் மேற்கொள்ள திட்டம்
முற்றிலும் சூரிய சக்தி மூலமாகவே இயங்கும் சோலார் இம்பல்ஸ் விமானம் பசிபிப் பெருங்கடல் மீதான தனது நெடுந்தூர பயணத்தை தொடங்கியது.
முற்றிலும் சூரிய சக்தி மூலமாகவே இயங்கும் சோலார் இம்பல்ஸ் விமானத்தை சுவிட்சர்லாந்தை சேர்ந்த விமானிகள் பெர்ட்ராண்ட் பிக்கார்டு(Bertrand Piccard) மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்(Andre Borschberg) ஆகியோர் வடிவமைத்தனர்.
இவ்விமானம் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி துபாயின் அபுதாபியில் இருந்து தனது பயணத்தை தொடங்கியது. அங்கிருந்து ஓமன், இந்தியா, மியான்மர் வழியாக சீனாவை அடைந்தது.
பின்னர் மோசமான வானிலை காரணமாக ஒரு மாதத்திற்கும் மேல் அங்கு நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சீனாவில் இருந்து அமெரிக்காவின் ஹவாயை நோக்கிய தனது பயணத்தை இன்று காலை தொடங்கியது.
ஐந்து அல்லது ஆறு நாட்கள் தொடர்ந்து பசிபிக் பெருங்கடல் மேல் பறந்து அது ஹவாயை அடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை இயக்கவுள்ள விமானி ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் செயல்பாடுகள் அனைத்தும் மொனாகோவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும் எனவும் அவருக்கு வானிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தேர்ந்த விமானிகள் மூலம் பாதை பற்றிய தகவல்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விமானம் பசிபிக் கடலை வெற்றிகரமாக கடந்து விட்டால் , உலகில் நீண்ட தூரத்தை கடந்த தனி விமானம் என்ற சிறப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
சீனாவில் இருந்து ஹவாயை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய சூரிய சக்தி மூலம் இயங்கும் விமானம்: தொடர்ந்து 5 நாட்கள் பயணம் மேற்கொள்ள திட்டம்
Reviewed by Author
on
June 01, 2015
Rating:
Reviewed by Author
on
June 01, 2015
Rating:



No comments:
Post a Comment