இலங்கையர்களின் வெளிநாட்டுப் பணத்திற்கு கூடுதல் வட்டி
இலங்கையர்களின் வெளிநாட்டு பணத்திற்கு கூடுதல் வட்டி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ள இலங்கையர்கள்> அந்தப் பணத்தை கொண்டு வந்து இங்கு வைப்புச் செய்தல், கூடுதல் வட்டி வழங்கத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கூடுதலான வட்டியும், அதிகளவான பாதுகாப்பையும் வழங்கத்தயார் என தெரிவித்துள்ளது.
கூடுதலான வட்டியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சில இலங்கையர்கள் வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ளனர்.
பத்து பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணம் இவ்வாறு வெளிநாட்டு வங்கிகளில் இலங்கையர்கள் வைப்புச் செய்துள்ளனர்.
இந்தப் பணத்தை மீளவும் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, டொலரின் பெறுமதி அதிகரிப்பு ஆகிய சாதகத்தன்மைகளை பயன்படுத்திக் கொள்ள வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு கொண்டு வருமாறு வைப்பாளர்களிடம் கோருகின்றோம்.
வெளிநாட்டு நிதியை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையர் அல்லாத தரப்பினருக்கு பாரியளவில் பணத்தை செலுத்துவதற்கு பதிலாக அந்தப் பணத்தை இலங்கையர்களுக்கு செலுத்த விரும்புகின்றோம்.
முதலீட்டாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு பணத்தை நாட்டுக்குள் கொண்டுவர விரும்பாமை அவ்வளவு சாதகமான நிலைமையல்ல என அமைச்சர் ரவி கருணாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களின் வெளிநாட்டுப் பணத்திற்கு கூடுதல் வட்டி
Reviewed by Author
on
June 01, 2015
Rating:
Reviewed by Author
on
June 01, 2015
Rating:

No comments:
Post a Comment