மன்னாரில் கிடைத்த எரிவாயு நிதியத்தை வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த விலைமனு கோரத் திட்டம்
மன்னாரில் கிடைக்கப்பெற்றுள்ள எரிவாயு நிதியத்தை நாட்டின் வணிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த கூடிய வகையில் எதிர்வரும் செப்டெம்பர் மாத்தில் விலைமனு கோரவுள்ளதாக மின் சக்தி எரிச்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மின் சக்தி எரிச்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மன்னாரில் இருந்து உனவட்டுன வரையில் வாயு மற்றும் எண்ணை நிதியம் காணப்படுகின்றமை உறுதிப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் டெரேடோ மற்றும் பெரிகிவுடா என்ற இரண்டு வாயு நிதியங்களில் இருந்து வாயு எடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் இதனடிப்படையில் முதற் கட்டமாக இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான டீசல் மற்றும் அதனை சார்ந்த எரிப்பொருளில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களை வாயு முறைக்கு மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறினார்.
மன்னாரில் கிடைத்த எரிவாயு நிதியத்தை வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த விலைமனு கோரத் திட்டம்
Reviewed by NEWMANNAR
on
June 09, 2015
Rating:

No comments:
Post a Comment