அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் புத்தர் சிலை வைக்க நடவடிக்கை-Photos



மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தள்ளாடி இராணுவ முகாமிற்கு முன்பாக குறித்த புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொசன் தினத்தை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் தள்ளாடி இராணுவத்தினரால் மக்களின் பார்வைக்காக பொஸன் தோரணங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அனைத்து தோரணங்களும் கழட்டப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் புத்தர் சிலை அமைக்கும் நோக்குடன் அரச மரம் நாட்டப்பட்டு சிறிய தூபி ஒன்றும் கல்லினால் அமைப்பப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை காலை முதல் திடீர் என அமைக்கப்பட்ட தூபியினையும்,நாட்டப்பட்ட அரச மரத்தினையும் காணக்கூடியதாக உள்ளது.குறித்த செயற்பாடுகள் இனவாதத்தை தூண்டும் செயலாக காணமுடிகின்றது.

அரச மரம் நாட்டப்பட்டு சிறிய தூபி அமைக்கப்பட்டுள்ளமைக்கு முன் பகுதியில் தள்ளாடி அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த வகையில் மக்களின் ஒற்றுமையினை சிதறடிக்கும் வகையில் திடீர் என குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடையம்.

நாட்டில் நல்லாட்சி  ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் மக்கள் ஒற்றுமையாக வாழும் இடங்களில் தூபிகளை அமைத்தல்,புத்தர் சிலை வைத்தல்,அரச மரங்களை நடுதல் போன்றவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

இராணுவத்தின் தலையீட்டுடன் அரங்கேற்றப்படும் குறித்த நடவடிக்கைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு நேற்று திங்கட்கிழமை குறித்த பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளதாகவும், இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.








மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் புத்தர் சிலை வைக்க நடவடிக்கை-Photos Reviewed by NEWMANNAR on June 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.