ரவிராஜ் - லசந்த - தாஜூடீன் ஆகியோரின் கொலைகள் பற்றிய விசாரணைகள் பூர்த்தி,,,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் ஆகியோரின் கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன.
கொலைகள் தொடர்பிலான சகல விசாரணைகளும் பூர்த்தியாகியுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்பய்பட உள்ளனர்.
கொலைகளை மேற்கொண்டவர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த அரசாங்கம் ஆட்சி செய்த காலத்தில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்களே இந்த கொலைகளை செய்துள்ளனர்.
பாதுகாப்புத் தரப்பினருக்கு அப்போது தலைமை தாங்கிய மிக முக்கியமான ஒருவரே கொலைகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுடீன் தனிப்பட்ட குரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைகள் தொடர்பிலான முக்கியமான சாட்சியங்களை புலானய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளதாக சிங்கள வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரவிராஜ் - லசந்த - தாஜூடீன் ஆகியோரின் கொலைகள் பற்றிய விசாரணைகள் பூர்த்தி,,,
Reviewed by Author
on
July 26, 2015
Rating:

No comments:
Post a Comment