அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழில் வேட்புமனுத் தாக்கல்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பினில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் த.தே.ம.மு தமிழ்காங்கிரஸ் கட்சி தலைவர்)
செல்வராஜா கஜேந்திரன் (முன்னாள் நா.உ)
மணிவண்ணன் (சட்டத்தரணி)
ஆனந்தி சிவஞானசுந்தரம் (ஓய்வுபெற்ற அதிபர்- இராமநாதன் கல்லூரி)
சுதா (குருநகர் பாடும் மீன் விளையாட்டுக்கழக உபதலைவர் )
அமிர்தலிங்கம் இராசகுமாரன் (விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவர்)
திருநாவுக்கரசு சிவகுமாரன் (சிவா) யாழ் பல்கலைக்கழக பட்டதாரி - (தீவகம்)
பத்மினி சிதம்பரநாதன் (முன்னாள் நா.உ)
சின்னமணி கோகிலவாணி (கிளிநொச்சி)
ஜெயரட்ணம் வீரசிங்கம் (வீரா) - (பல்கலைக்கழக ஊழியர் சங்கம்)
ஆகியோர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழில் வேட்புமனுத் தாக்கல் Reviewed by NEWMANNAR on July 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.