மஹிந்தவின் விரலை முறித்தவர் மன்னிப்பு கோரினார்..!

பொதுத்தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, அக்குரஸ்ஸ நகரத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றார். அங்கு பழைய பஸ்தரிப்பிடத்திலேயே பிரசாரக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தேர்தல் பிரசாரக்கூட்டம் மாலை 4 மணி க்கு ஆரம்பமானது. மஹிந்த ராஜபக் ஷ மாலை 5.30க்கு குறித்து இடத்துக்கு சென் றார். குண்டுகள் துளைக்காத பென்ஸ் காரில் சென்றிறங்கிய அவர், குழுமியிருந்த மக்களுக்கு இடையிலேயே மேடையை நோக்கி சென்றார்.
அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர், தனது ஆர்வ மேலீட்டால், ராஜபக் ஷவின் கை யை பிடித்துள்ளார். அச்சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக் ஷ தன் கையை பிடித்தவரை நோக்கி தாக்க முயற்சித்துள்ளார். அவ்வாறு மஹிந்த, ராஜபக் ஷ தாக்க முயற்சித்த போதும் அவருக்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்த பாதுகாப்பு தரப்பைச்சேர்ந்த மூவரும் தாக்குதலை தடுத்துநிறுத்துவதற்காக மஹிந்த ராஜபக் ஷவை பின்னால் தள்ளிவிட்டனர். அப்போது அவர் விழப் பார்த்தார். எனினும், மஹிந்தவுக்கு பின்னால் இருந்த பாதுகாப்பு தரப்பினர் மஹிந்தவை பிடித்துவிட்டனர்.
அதன் பின்னர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அக்குரஸ்ஸ வேட்பாளர் மனோஜ் சிறிசேன, மஹிந்த ராஜபக் ஷவை மேடைக்கு அழைத்துச் சென்றார்.
அந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக் ஷ சுமார் 25 நிமிடங்கள் உரையாற்றினார். எனினும், இந்த சம்பவம் தொடர்பில் எதுவுமே கூறவில்லை.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில், விளக்கமளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
'அக்குரஸையில் எனது கைவிரலை பிடித்தார் ஆதரவுக்காகத்தான். அவர் போதையில் இருந்தாரோ தெரியவில்லை, ஆனால், நல்ல சுதந்திரக்கட்சிக் காரர், வந்து என்னுடைய கைவிரலை பிடித்தார். பிடித்தமாதிரி என்னுடைய கைவிரல் கொஞ்சம் இருந்திருந்தால் உடைந்திருக்கும். நான் என்ன செய்ய தள்ளிவிட்டேன். நான் தள்ளிவிட்டு இருக்காவிடின் கைவிரல் உடைந்திருக்கும்' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையைப் பிடித்து இழுத்ததாக கூறப்படும் அக்குரஸ்ஸவை வசிப்பிடமாகக் கொண்ட எஸ்.எஸ்.ஜி.சமிந்த என்பவர் மாத்தறையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் சம்பவம் தொடர்பாக விபரித்த போது, “கூட்டம் இடம்பெற்ற போது நான் கொஞ்சம் மதுபோதையில் இருந்தேன்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கண்டதும் நான் இருந்த இடத்தையே மறந்து விட்டேன்.
நான் அவருடைய கையைப் பிடித்து இழுத்தேன். பாதுகாப்புத் தரப்பினர் மற்றொரு பக்கம் இழுத்தனர். மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் பாரிய நெரிசல் ஏற்பட்டது. என்னால் ஏற்பட்ட சங்கடத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன் என்று குறிப்பிட்டார்.
மஹிந்தவின் விரலை முறித்தவர் மன்னிப்பு கோரினார்..!
Reviewed by Author
on
July 25, 2015
Rating:

No comments:
Post a Comment