அண்மைய செய்திகள்

recent
-

கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மரணம்


தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபையின் உறுப்பினரும் எதிர்கட்சித் தலைவருமான அருள்நாயகம் அமிர்தலிங்கம் வெள்ளிக்கிழமை இரவு அன்னாரது பெரியகல்லாறு இல்லத்தில் நோய்வாய்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இவர் சுகயீனம் காரணமாக நீண்ட நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்துள்ளார்..

அதன் பின்னர் வீட்டில் இருந்தவாறே இயற்கை மரணம் எய்தினார்.

நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இவர் தமிழ் முஸ்லிம் சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்ற அரசியல்வாதியாகத் திழ்ந்தவராகும்.

இளைஞர் பருவத்திலிருந்தே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்தவராகும்.

2006ல் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்து, 2011லிருந்து இறக்கும்வரை மாநகர சபையின் எதிர்க்கட்சிக் தலைவராக இருந்து வருவதுடன் கல்முனை கிளையின் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் இருந்து சேவை செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை கல்முனை மாநகர சபை மண்டபத்தில் காலை 8.00 மணி தொடக்கம் 10.00 மணிவரை வைக்கப்பட்டு பின்னர் மாலை 4.00 அவரது சொந்தக் கிராமமான நற்பிட்டிமுனையில நல்லடக்கம் செய்யப்படும்.
கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மரணம் Reviewed by NEWMANNAR on July 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.