அண்மைய செய்திகள்

recent
-

பொதுத் தேர்தலில் 556 பெண்கள் போட்டி


இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் அரசியல்கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ஊடாக 556 பெண்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் அதிகளவான பெண்கள் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 147 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

ஆகக்குறைந்த பெண் வேட்பாளர்கள் பதுளை மாவட்டத்தில் போட்டிடுகின்றனர். அங்கு மூன்று பெண்கள் போட்டியிடுகின்றனர்.

எவ்வாறாயினும் உலக நாடுகள் வரிசையில் பெண்கள் அரசியலில் குறைவான எண்ணிக்கையில் ஈடுபடும் நாடு இலங்கையாகும்.

நாடாளுமன்றத்தில் உருவாக்கப்படும் முக்கியமான சட்டங்கள் தொடர்பில் படித்த, புத்திசாலித்தனமான பெண்களின் கருத்துக்களும் யோசனைகளும் அவசியம்.

இதனால், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்த கருத்தரங்குகள் கூட நடத்தப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதம் அதிகரிக்க வேண்டும் என தற்போதைய அரசாங்கம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுத் தேர்தலில் 556 பெண்கள் போட்டி Reviewed by NEWMANNAR on July 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.