ஆண் நண்பர்களுடன் போட்டி போட்டு மது அருந்தும் கல்லூரி மாணவி
ஆண் நண்பர்களுடன் அமர்ந்து இளம் பெண் ஒருவர் மது அருந்தும் காட்சி வாட்ஸ்அப்பில் பரவி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட பெண் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவியாக இருக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மதுபழக்கத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுவன் ஒருவனுக்கு அவரது உறவினர் ஒருவரே நண்பருடன் மது ஊற்றிக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் வாட்ஸ்அப் மூலம் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து மற்றொரு சிறுவனுக்கு சில இளைஞர்கள் மது ஊற்றி கொடுத்த சம்பவமும் வாட்ஸ்அப்பில் பரவி கவலையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவி ஒருவர் காதல் விரக்தியில் மது அருந்தி சாலையில் சரிந்து கிடந்தார். பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் மது அருந்தினார்.
இது சமூக ஆர்வலர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முழக்கம் முன்பை விட பலமாக ஒலித்தது. பல அரசியல் கட்சிகள் பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என தொடர் கோரிக்கை முழக்கங்களை முழங்கி வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி, ‘‘திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம்’’ என அதிரடியாக அறிவித்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், திருச்சி கல்லூரி மாணவி ஒருவர் அவரது ஆண் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தும் வீடியோ காட்சி என வாட்ஸ்அப்பில் வீடியோ காட்சி ஒன்று பரவி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 18 வினாடிகள் ஓடும் அந்த காட்சியில், “வாலிபர்கள் சிலர் சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை சூழ்ந்து நிற்கின்றனர்.
மது அருந்தும் இளம் பெண் அருகே மேலும் ஒரு பெண் படுத்து கிடக்கிறார். சில வாலிபர்கள் கீழே அமர்ந்திருந்து மது அருந்துகின்றனர். சம்பந்தப்பட்ட பெண் நாற்காலியில் அமர்ந்தபடி மது அருந்துகிறார். அப்போது, வாலிபர் ஒருவர் “டேய் இவள் பரம்பரை குடிகாரியைபோல் குடிக்கிறாள்” என்று கிண்டல் செய்கிறார். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் சம்பந்தப்பட்ட பெண் மது குடிப்பதில் பிசியாக இருக்கிறார். இளைஞர்களுக்கு அந்த பெண் ‘சியர்ஸ்’ சொல்லி டம்ளரில் இருக்கும் மதுவை காலி செய்வது போல் காட்சி முடிகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் நண்பர்களுடன் போட்டி போட்டு மது அருந்தும் கல்லூரி மாணவி
Reviewed by NEWMANNAR
on
July 23, 2015
Rating:

No comments:
Post a Comment