முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமுக்கு தமிழரசுக்கட்சி இளைஞர் அணி அஞ்சலி
இஸ்லாமியராக இருந்தபோதிலும் தன்னை ஒரு தமிழனாக மட்டுமே அடையாளப்படுத்திக்கொண்ட உலகம்போற்றும் நபரான மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இது தொடர்பான நிகழ்வு நேற்று மாலை ஊறணி அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் எஸ்.சேயோன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய மற்றும் மீன்பிடி,கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, இலங்கை பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.சௌந்தரராஜா,ஞா.சிறிநேசன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது டாக்டர் அப்துல் கலாமின் உருவப்படத்துக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமுக்கு தமிழரசுக்கட்சி இளைஞர் அணி அஞ்சலி
Reviewed by NEWMANNAR
on
July 31, 2015
Rating:
No comments:
Post a Comment