இன்றையதினம் வானில் நீல நிலவு
வானில் ஒரே மாதத்தில் இரண்டு பெளர்ணமி தோன்றும் அரிய நிகழ்வான நீல நிலவு என்ற நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.
வருடத்தில், 12 மாதங்கள் இதில், ஒரு மாதத்தில் ஒரு பௌர்ணமி தான் வரும். இதுதான் இயற்கை. ஆனால், சில நேரங்களில் ஒரு மாதத்தில் 2 பௌர்ணமி வரும்.
இதை வானில், மிக அதிசயம் என்று விஞ்ஞானிகள் கூறுவர்.
ஒரு மாதத்தில் 2 பௌர்ணமி வரும் தருணத்தை நீல நிலவு என்று விஞ்ஞானிகளால் பெருமையுடன் அழைக்கப்படும்.
கடந்த 2 ஆம் திகதி முழு பௌர்ணமி வந்தது. இந்த நிலையில், தற்போது, இந்த மாதத்தில், மீண்டும் இன்று 31ஆம் தேதி 2 ஆவது பௌர்ணமி வருகிறது. இந்த பௌர்ணமியின் போது, முழு நிலவாக தோன்றும். இது நீல நிலவு என்று அழைப்பார்கள்
இன்றையதினம் வானில் நீல நிலவு
Reviewed by NEWMANNAR
on
July 31, 2015
Rating:

No comments:
Post a Comment