சயனைட் ,தொலை தொடர்பு சாதனங்களுடன் இலங்கையர் உட்பட மூவர் இந்தியாவில் கைது
இலங்கைக்கு கடத்தவிருந்த சயனைட் , தொலைத் தொடர்பு சாதனங்களுடன் மற்றும் பொருட்களுடன் இலங்கையர் உட்பட மூவரை ராமநாதபுரம் கடலோரப்பகுதி பாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இந் நிலையில் நேற்று இரவு உச்சிப்புளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டடு வந்த மாவட்ட காவல்துறையினர் சந்திகத்தின் பேரில் காரொன்றை நிறுத்தி சோதனை செய்தனர் .
குறித்த காரில் சோதனை நடத்திய போது மறைத்து வைத்திருந்த 300 கிராம் சயனைட் ,75 சயனைட் குப்பிகள், 4 திசைகாட்டும் கருவிகள், 8 செல்போன்கள் இந்தியப்பணம் ரூபா 50 ஆயிரம் மற்றும் இலங்கை பணம் ரூபா 19 ஆயிரம் ஆகியவற்றை கைப்பற்றிய பொலிஸார் காரையும் பறிமுதல் செய்தனர்.
இதேவைளை காரில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிரிஷ்ணகுமார் (39), உச்சிப்புளி அருகே உள்ள சுந்தரமடையான் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், மற்றும் நகாச்சி கிராமத்தை சேர்ந்த ஜெய்குமார் (27) ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் தொடர்பிருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சயனைட் ,தொலை தொடர்பு சாதனங்களுடன் இலங்கையர் உட்பட மூவர் இந்தியாவில் கைது
Reviewed by Author
on
July 22, 2015
Rating:

No comments:
Post a Comment